நெட்டிசன்:
புாலசுப்ரமணியன் ( Bala Subramanian) அவர்களின் முகநூல் பதிவு:
கடந்த சில ஆண்டுகளாக இந்திய எல்லையை ஒட்டிய சர்வதேச கடல் பகுதியில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் மீன்பிடி கப்பல்கள் மீன்பிடித்துவருவதாகவும் அந்நிறுவனங்கள் தான் மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடிக்க வந்தால் சுட்டுக்கொள்கின்றன என்றும் சொல்லப்படுகிறது
இதுகுறித்து இந்திய அரசு உரிய முறையில் விசாரணை செய்யாமல் இலங்கைமீது பழிபோட்டு தனது கடமையை தவறுகிறது என்றும் சொல்லப்படுகின்றது
இந்நிலையில் தங்கச்சிமடம் மீனவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து இலங்கை ராணுவத்தால் மற்றும் இலங்கை அரசால் துப்பாக்கி சூடு எதுவும் நடத்தப்படவில்லை என்று அறிவித்திருப்பதால் சர்வதேச மீன்பிடி படகுகளின் சதியா என்பதை அரசு விசாரித்து உண்மையை மக்களுக்கு சொல்லுமா?
இப்படி துப்பாக்கிச்சுடு பன்னாட்டு மீன்பிடி கப்பல்களால் நடத்திட வாய்ப்பு உள்ளதா என்பதை இந்திய இலங்கை அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும்