டெல்லி: அஸ்ட்ராஜெனெகா  கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக  சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா தெரிவித்து உள்ளார்.
உலகநாடுகளை மிரட்டி வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்க உலக நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் மும்மும்ரமாக ஈடுபட்டு வருகின்றன. பல தடுப்பு மருந்துகள் ஏற்கனவே 2கட்ட சோதனைகளை முடித்துவிட்டு இறுதிக்கட்ட சோதனைகளை நடத்தி வருகின்றன.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனெகா  என்ற பெயரில் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இதை மனிதர்களுக்கு சோதனை நடத்தி வருகிறது. ஏற்கனவே முதல் மற்றும் 2வது கட்ட சோதனைகள் நடைபெற்றுள்ளன.தற்போது  3வது கட்ட சோதனையை தொடங்கி உள்ளது.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அமெரிக்கா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் 3 ஆம் கட்டம் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றனர். இந்த தடுப்பூசி, இந்தியாவில் ஒடிசாவை சேர்ந்த  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute) நிறுவனத்துடன் இணைந்து 2 மற்றும் 3 கட்டம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீரம் நிறுவனத்தின்  தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவல்லா கூறியதாவது, அஸ்ட்ராஜெனெகா  என்ற பெயரில் தடுப்பூசியின் சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.  இந்திய அரசு, அவசரகால அனுமதியளித்தால், ஆஸ்ட்ராஜெனகா  கொரோனா தடுப்பு மருந்து வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

மேலும், தற்போது மருத்துவ தயாரிக்கும் பணிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும்,   அடுத்தாண்டின் இரண்டாம் அல்லது மூன்றாவது காலாண்டில் 100 மில்லியன் டோஸ் அளவிற்கு மருந்து தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தவர்,  எங்களின் பரிசோதனைகள் டிசம்பரில் முடிவடையும், அதேவேளையில், பிரிட்டனில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிது உள்ளது. அங்கும் ரிசோதனை முடிவடையும் தருவாயில் உள்ளது. இவைகள் முடிந்தவுடன் பயன்பாட்டுக்கும் வந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.