சென்னை :
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடியும், கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதித்தும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில்.
பல்வேறு, மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தி இருக்கிறது.
மருத்துவமனைகளிலும் கிளினிக்குகளிலும் மருத்துவர்களை சென்று பார்த்துவரும் மருந்து நிறுவன பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தங்கள் மருத்துவமனைகளுக்கு வரவேண்டாம் என்றும்.

மருந்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை நோயாளிகள் அதிகம் வரும் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவருடன் முன் அனுமதி இருந்தால் அல்லது அவர்கள் அழைத்தால் மட்டுமே அங்கு செல்லவும், இல்லையேல் அவர்கள் வீட்டிலிருந்த படியே தொலைபேசி வாயிலாக வேலை செய்யவும் உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இயங்கி வந்த மால்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இதனால், இந்த இடங்களில் தினக்கூலி அடிப்படையில் வேலைசெய்பவர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் இவர்களை நம்பி இயங்கி வந்த சாலையோர கடைகள் என்று அனைவரும் சிரமங்களை அனுபவிக்கின்றனர்.

மேலும், மென்பொருள் நிறுவனங்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அலுவலகத்திற்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்பவர்கள் முதல் கேப் ஓட்டுனர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திரமாக பாடி திரிந்த பறவைகளெல்லாம், கொரோனா வைரஸ் காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருப்பது போல் உட்கார்ந்து கொண்டு சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தங்களின் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், தினக் கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.
[youtube-feed feed=1]