பெங்களூரு:
கர்நாடக மதுக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மது வகைகள் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அம்மாநில கலால் துறை தெரிவித்துள்ளது.
அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் நாற்பது நாள் தடைக்கு பின் மீண்டும் மதுகடைகள் திறக்கப்பட்டன. கடை திறந்ததும் முண்டியடித்த மதுப்பிரியர்கள் காவல்துறை தடியடிகு பின்னர் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிசென்றனர். வரிசையில் நின்ற மதுப்ரியர்களுக்கு மதுக்கடை ஊழியர்கள் கிருமி நாசினி வழங்கி அதன் பின்னரே கடைக்கு அருகில் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 3.9 லட்சம் லிட்டர் பீர், 8 லட்சம் லிட்டர் சரக்கு வகைகள் விற்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் ரூ.45 கோடி வருவாய் ஈட்டப்படுள்ளாதகவும் கர்நாடக மாநில கலால் துறை தெரிவித்துள்ளது.
அதேசமயம், கர்நாடகாவில் மதுகடைகள் திறக்கப்பட்டதால் காட்டு வழியாக தமிழகத்தை சேர்ந்த பல மதுப்பிரியர்கள் கர்நாடக சென்று மது பாட்டில்கள் வாங்கி சென்றனர்.
தமிழகத்தில் இருந்த மதுபாட்டில் வாங்க சட்டவிரோதமாக கர்நாடக எல்லைக்குள் நுழைவதை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.