சென்னை: சென்னையில் 3 மண்டலங்களில் மட்டும் 3000 கொரோனா தொற்றுகள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை நகரில் மட்டும் இப்போது 635 கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருக்கின்றன.
இந்த மண்டலங்களில் 3 மண்டலங்களில் கடும் பாதிப்பு பதிவாகி இருக்கிறது. பெரும்பாலான கொரோனா தொற்றுகள் ராயபுரம், கோடம்பாக்கம் மற்றும் திருவிக நகர் ஆகிய இடங்களில் உள்ளன.
அதாவது ராயபுரம், திருவிக நகர் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் தலா 1,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. 3,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பராமரிப்பு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர்.
517 பகுதிகள் நகரத்தில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூரில் 26, மணலியில் 9, மாதவரத்தில் 18, தண்டையார்பேட்டையில் 43, ராயபுரத்தில் 98, திருவிக நகரில் 90, அம்பத்தூரில் 32, அண்ணா நகரில் 27, தெயாம்பேட்டில் 59, கோடம்பாக்கத்தில் 39 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அகற்றப்பட்டன. கடந்த 14 நாட்களாக இந்த பகுதிகளில் எந்த கொரோனா தொற்றும் இல்லை.