டெல்லி:

ணியிடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. புதிய நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில்கள் தொடங்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அலுவலகங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், மத்திய சுகாதாரத்துறை, ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளித்துவிட்டு பணிகளைத் தொடரலாம் என்றும் பெரிய அளவில் பாதிப்பு இருந்தால், கிருமிநீக்கம் செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்கு அலுவலகத்தை மூட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஊழியர்கள் காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்டால் அலுவலகம் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.