சென்னை:

சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் விமான நிறுவன ஊழியர் உயிழந்துள்ளார். இவரது குடும்பத்தினருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து உயிரழந்தவர் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா சமூக பரவலாக மாறாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே, கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் 3 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பியுள்ளனர். சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 84 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினார். இதேபோன்று, 54 பெண் ஒருவரும், 24 வயது இளைஞரும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு இன்று வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.