சீனா :
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 242 பேர் இறந்தனர், கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் உயிரிழப்புகளில் இதுவே மிகவும் மோசமான நாள்.
வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் நேற்று ஒரே நாளில் 14,840 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் நிலவிய தகவலின்படி கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில். நேற்று ஒரே நாளில் நிகழ்ந்த இந்த சம்பவம், மக்களை மீண்டும் பீதியடைய செய்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு, இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், நோய் தொற்று இனியும் பரவாது என்று தற்பொழுது எதுவும் கூறமுடியாது என்றும் சொல்கிறது.
இந்நிலையில், சிங்கப்பூர் டி.பி.எஸ். (DBS) வங்கியில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அந்த வங்கியில் வேலை செய்யும் 300 பேரையும் நேற்று வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவிட்டு, வங்கி செய்யப்பட்ட கட்டிடத்தின் அனைத்து பகுதியும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீனாவை தொடர்ந்து, ஜப்பான் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான வைரஸ் பாதித்தோர் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மிகப்பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் இந்த கொரோனா வைரஸ் எனும் நோய்க்கு கோவிட்-19 (COVID-19) என்று உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது.