பிரேசிலியா: பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டு அதிபர் போல்சனாரோவுக்கு சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதன் காரணமாக வழக்கமான அலுவலக பணிகளை மேற்கொள்ள அலுவலகம் வரவில்லை. தமக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை போல்சனாரோ தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது  உடல் நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.