கொரோனா தொற்று (கோவிட் 19) தமிழகத்தில் 4000 பேருக்குமேல் தொற்றியுள்ள  நிலையில் உலகம் முழுதும் கொரோனா நோயின் அறிகுறிகள் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் , என்ன பேசுகிறார்கள் என்பதை ஒரு சிறு ஆய்வாக பத்திரிக்கை.காம் குழு டுவிட்டரின் ரமேம்படுத்தப்பட்ட தேடல் மூலமாக 10,000 கீச்சுகளை (டுவிட்) தொகுத்து அதிலிருந்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழில் தரவு அறிவியல் கொண்டு செயல்படுத்தப்படும் மின் ஊடகங்களில் பத்திரிக்கை.காம் தான் முதன் முதலாக தரவு அறிவியல் (Data Science ) துணை கொண்டு இந்த ஆய்வை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
 
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றின் அறிகுறிகள் இங்கே
 
1.கொரோனா வந்தால் ருசியிழந்து போகும் அறிகுறி
2.கொரோனா வருவதை முன்கூட்டியே கண்டறியும் மின்னணு வளையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
https://flip.it/Qidb3u
3.புகைப்பிடிப்பவர்கள் எளிதில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிறார்கள்
4.நுரையில் அல்லாத மற்ற பகுதிகளையும் பாதிக்கிறது. குறிப்பாக மூளைக்குள் இருக்கும் இரத்த குழாய்களை பாதித்து அதனால் இரத்த கசிவுகளையும் ஏற்படுத்துகிறது
5.உடல் சோர்வு, காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி , வயிற்றுப்போக்கு ஆகியவை ஒன்றிணைந்து இருந்தால் மருத்துவரை ஆலோசிக்கவேண்டும்
6.விட்டமின் டி , நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தி வைரஸ் கிருமியின் தாக்குதலை குறைக்கிறது .
7. உலகமெங்கும் பல இடங்களில் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு 80% பேருக்கு எந்த அறிகுறியும் தெரிவதில்லை
8.ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி கொரோனாவில் இருந்து பாதுகாக்க உதவும்.
9.கொரோனா தொற்றாளருக்கு லேசான இரத்த சோகை இருக்கும்
10.சொறி, படை நோய், கால் விரல்கள் நீல நிறத்தில் மாறுதல் மற்றும் வாய் மற்றும் தொண்டையில் புண்கள் ஆகிய அறிகுறிகள் தென்பட்டுள்ளது
https://www.mirror.co.uk/science/new-coronavirus-symptom-look-out-21893870
இன்னமும் பல தகவல்கள் கொண் எங்கள் ஆய்வின் முடிவுகள் கீழே உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
நீங்களும் பார்க்கலாம்
ஆய்வு விபரம் மற்றும் ஆதாரம்
https://datastudio.google.com/u/2/reporting/0b1093d7-1bfb-4ae7-8872-0c571c10f041/page/iczOB
அறிவிப்பு
இச்செய்தியின் நோக்கம். உலகமெங்கும் மக்கள் டுவிட்டர் வழியாக பரிமாறும் தகவல்களை தொகுத்து கொரோனா அறிகுறிகள் உலகமெங்கும் வேறுபடுகிறதா அல்லது ஒரே மாதிரியாக இருக்கின்றதா என்பதை அறியச் செய்யும் ஒரு முயற்சியே!! கொரோனா தொற்று அறிகுறிகள் எல்லா இடத்துக்கும் ஒரே மாதிரி இருக்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்
செல்வமுரளி