டில்லி
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
உலக அளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதையொட்டி பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது அவ்வகையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
ஆயினும் கொரோனா கட்டுக்குள் வராததால் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆயினும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மட்டும் 1993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரே நாளில் இத்தனை பேர் பாதிக்கப்பட்டது கிடையாது.
இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35000 ஐ தாண்டி விட்டது. இதில் 1154 பேர் உயிர் இழந்துள்ளனர். 9068 பேர் குணமடைந்துள்ளனர். பாதிப்படைந்தோர் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா அதிக அளவில் உள்ளது. அடுத்ததாக குஜராத் மற்றும் டில்லி மாநிலங்கள் உள்ளன.
தமிழகம் பாதிப்படைந்தோர் எண்ணிக்கையில் ஆறாம் இடத்தில் உள்ளது.