டெல்லி: கொரோனா பாதிக்கப்பட்டோரின் தும்மல் மூலம் 60அடி தூரம் வரை தொற்று பரவும், அனைவரும் இரட்டை முகக்கவசம் அணியுங்கள் என பொதுமக்களுக்கு மத்திய அரசு  வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்து வருவதால், தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்து பாதுகாப்பு நெறிமுறைகளை மத்திய அரசு அவ்வப்போது  தெரிவித்து வருகிறது. இந்த நிலையில்,  மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் டாக்டர் கே.விஜயராகவன் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

அறிகுறிகள் முற்றிலும் இல்லாதவர்கள் கூட கொரோனா பரவ காரணமாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இருமல் மற்றும் தும்மல் மூலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரிடம் இருந்து உமிழ் நீர்த்துளிகள் சாதாரணமாக 6 அடி தூரத்திற்கு பரவும்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நபரிடம் இருந்து ஏரோசால் எனப்படும் நுண்ணிய நீர் துகள்கள், 30 அடி தூரம் வரை காற்றில் கொண்டுச் செல்லப்படும். அதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

கொரோனா  பாதிக்கப்பட்ட நபரின் உமிழ்நீர், நாசி நீர்த்துளிகள் மற்றும் ஏரோசால்கள் மூலமாக தான் கொரோனா வைரஸ் அதிகளவில் பிறருக்கு பரவி வருகிறது. இது ஆய்வுகள் மூலம்  தெரிய வந்துள்ளது.

மேலும்,  கதவுகளின் கைப்பிடிகள், மின் விளக்கு, மின்விசிறி சுவிட்சுகள், டேபிள்கள், நாற்காலி, தரை ஆகியவற்றை பிளீச் மற்றும் பினாயில் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்

காற்று மூலமாக தொற்று ஏற்படுவதை தடுக்க இரட்டை முகக்கவசங்கள் அல்லது N – 95 தர முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்

முகக்கவசங்கள், தனிமனித இடைவெளி, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது போன்றவை மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றியை பெற்றுத்தரும்

இவ்வாறு   மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் டாக்டர் கே.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.