சென்னை: சென்னையில் தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி,  தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.  நேற்று மட்டும் புதிதாக 6,711 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. அதிக பட்சமாக சென்னையில்,  2,105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,67,181  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  8 பேர் உயிர் இழந்ததுடன், இதுவரை   4,332 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை  2,45,751 பேர் தொற்று பாதிப்பில் இருந்து  குணம் அடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில்  சென்னையில் 17,098 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்தப் பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற பட்டியலை சென்னை மாநகராட்டிச வெளியிட்டது.   அதைத்தொடர்ந்து கொரோனா தொற்று பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளில் சென்னை மாநகராட்சி இன்று (ஏப்.13) ஈடுபட்டுள்ளது.

கொரோனா பாதித்தவர்கள் எத்தனை பேர்,, என்ன நாட்களிலிருந்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, வீ எத்தனை நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற விவரங்களுடன் கூடிய ஸ்டிக்கர்களை பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஒட்டி வருகின்றனர். மண்டல வாரியாக அந்தப் பணிகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

மேலும், கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணிகளிலும் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட தெரு அல்லது குடியிருப்பில் 3-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அப்பகுதியை கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றும் நடவடிக்கையிலும் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.