சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்  நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் 136 படுக்கைகளுடனான “Corona zero delay extension ward”  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வார்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் இன்று காலை திறந்து வைத்தார். தொடர்ந்து மருத்துவமனையை ஆய்வு செய்தார்.

‘பின்னர் செய்தியளார்களை சந்தித்தவர்,  தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக  11 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. அவைகள்,  னைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளை பார்க்க, உடன் இருந்து கவனித்துக் கொள்ள அவர்களது உறவினர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களை கவனித்துக்கொள்ள கூடுதல் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்  கூறினார்.