சென்னை

ரும் 6 ஆம் தேதி அன்று செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பாதிப்பு குறைந்து வருகிறது.  இதையொட்டி தமிழக ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   ஆயினும் விரைவில் மூன்றாம் அலை கொரோனா தாக்குதல் ஏற்படலாம் என அச்சம் நிலவுகிறது.

இதனால் தமிழக்த்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  தமிழக அரசு ஏற்படுத்தி உள்ள விழிப்புணர்வு காரணமாக மக்கள் அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகள் போட முன் வந்துள்ளனர்.  கொரோனா தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும் மருந்துகள் கிடைத்த உடன் தமிழக அரசு உடனடியாக மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தி வருகிறது.

தற்போது தமிழகத்தில் பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசால் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்குச் சென்னை கலைவாணர் அரங்கில் ஜூலை 6ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த தடுப்பூசி முகாமை தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்துகிறது.  தமிழக அரசு இந்த முகாமில் கலந்துக் கொண்டு அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் தவறாமல் தடுப்பூசி சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.