சென்னை: தமிழகத்தில் கடந்த 11 நாட்களில் 3 லட்சம் முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16ந்தேதி தொடங்கியது. அதன்படி தமிழகத்தில், . முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்கள பணியாளா்கள் என, ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து 2வது கட்டமாக  60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்,  40வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.  மேலும், அரசு மருத்துவமனையின்றி தனியார் மருத்துவமனைகளிலும் ரூ.250க்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 1ந்தேதி முதல் 11ந்தேதி வரையிலான 11 நாள்களில் மட்டும் 3.17 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக தெரவிக்கப்பட்டு உள்ளது. மேலும்   45 வயதுக்கு மேற்பட்ட 1.96 லட்சம் இணை நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.