சென்னை: கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெஸிவிர், ஹைட்ராக்ஸிகுளோரோகியுன், லோபினாவிர், ரிட்டோனாவிர் ஃபவிபிராவிர் உள்ளிட்ட மருந்துகள், மத்திய சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மருந்துகள் தொடர்பாக, தேசிய மற்றும் சர்வதேச அளவிலிருந்து வரும் தகவல்கள் ஆராயப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. “தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மதிப்பாய்வு அவசியமானது” என்று தெரிவிக்கப்படுகிறது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர், “நாங்கள் காத்திருந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்” என்றுள்ளார்.
ரெம்டெஸிவிர் என்ற மருந்து நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்தப் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த மருந்து, உட்கொண்ட நபர்களுக்கு ஆல்கலைன் பாஸ்பேட் அளவு அதிகரிப்பதாகவும், அதன்மூலம் நுரையீரல் சேதமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பால் ஒருங்கிணைந்த பரிசோதனை நிறுத்தப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகியுன், லோபினாவிர், ரிட்டோனாவிர் போன்ற மருந்துகளும் மதிப்பாய்வில் உள்ளன.
ஃபவிபிராவிர் என்ற மருந்தும், நோயாளிகளுக்கு பசியின்மை, குமட்டல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி, யூரிக் ஆசிட் அளவை அதிகரிப்பதாக கூறப்படுவதையொட்டி, அதுவும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், நாட்டில், அரசு ஆய்வகங்கள் 786 என்பதாகவும், தனியார் ஆய்வகங்கள் 314 என்ற எண்ணிக்கையிலும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.