நெட்டிசன்:
சவுக்கு சங்கர் முகநூல் பதிவு…
இந்த அரசு அதிகாரிகள் இருக்கிறார்களே… அவர்களைப் போன்ற சுயநலம் பிடிச்ச கேவலமான பிறவிகளை பார்க்கவே முடியாது.
மிக மிக அற்புதமான விதிவிலக்குகள் உண்டு. இது அவர்களைப் பற்றியதல்ல. பேரழிவு வந்து உலகம் அழியும் சூழலிலும், தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாப்பதற்காக எவ்விதமான பஞ்சமா பாதகத்தையும் செய்வார்கள். அத்தகைய பாதகங்களை செய்வதை, நியாயப்படுத்தவும் செய்வார்கள்.
அரசியல்வாதியாவது, ஐந்து வருடத்துக்கு ஒரு முறை மக்கள் காலில் விழுகிறான். தலித் வீட்டு வாசலுக்கு சென்று கும்பிடுகிறான். குடிசைக்குள் நுழைகிறான். ஆனால் இந்த அதிகாரிகள் ஓய்வு பெறும் வரை, படை பரிவாரங்களோடு செல்வாக்காக இருப்பார்கள். இந்த போதைதான் ஓய்வு பெற்ற பிறகும், எப்படியாவது புதிய பதவியை பெற அவர்களை ஆலாய்ப்பறக்க வைக்கிறது.
டெல்லியில் நோய் தொற்று மோசமாக இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். டெல்லியில்தான் அதிகமாக பிற மாநில தொழிலாளர்கள். தங்கியிருக்கிறார்கள். இந்த நோய் தொற்றை சமாளிக்கவே முடியாமல்தான், நாட்டில் முதல் முறையாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், “வைரஸோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும்” என்றார்.
இந்த டெல்லியில், கேஜ்ரிவால் அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால், டெல்லியில் உள்ள உயர்தர, ஐந்து நட்சத்திர மற்றும் இதர சொகுசு ஹோட்டல்களை, அரசு கையகப்படுத்தும். இந்த ஹோட்டல்களில், டெல்லி அரசின் உயர் உயர் அதிகாரிகள், அவர்கள் உறவினர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளிக்க வேண்டும்.
டெல்லி ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் பிரிவாக இந்த ஹோட்டல்களை கருதி, மருத்துவர்கள் அவர்களுக்கு  சிகிச்சை அளிக்க வேண்டும்.
இது எத்தகைய அயோக்கியத்தனம் !!!
புலம் பெயர் தொழிலாளர்கள் வீதி வீதியாக நடந்து, வெயிலிலும், விபத்திலும், ரயிலில் அடிபட்டும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பல இடங்களில் உணவின்றி வீதிகளில் விலங்குகள் போல அலைகிறார்கள்.
இவையெல்லாம் இந்த அதிகாரிகளுக்கு தெரியாதா என்ன ?
இது தெரிந்தும், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சிகிச்சை என ஏற்பாடு செய்யும்,
இந்த அதிகாரிகள் எத்தகைய குரூர மனம் படைத்தவர்களாக இருப்பார்கள் !!!
அதிகாரிதான் கேட்கிறான் என்றால், அதை ஏற்று உத்தரவு போடும் கேஜ்ரிவால் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருப்பான் ?
கேஜ்ரிவாலும் ஒரு முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி என்பதை மறந்துவிட முடியாது.
இந்த அதிகாரிகளிடம் சாமான்ய மக்களுக்கு என்ன நியாயம் கிடைக்கும் !!
இதன் காரணமாகத்தானே நக்சலைட் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை இல்லாமல் துப்பாக்கியை தூக்குகிறான் ?