சென்னை

மிழக தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது,.  மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.  இங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன.

இதன் அடிப்படையில் தமிழக அரசு கடந்த மே மாதம் கிஅட்டணங்களை திருத்தி அமைத்தது.  அதன்படி ஒரு நாளைக்குத்  தீவிரமற்ற ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளுக்கு ரூ.5000,  தீவிரமற்ற ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுகைகளுக்கு ரூ.15000, வெண்டிலேட்டரகளுடன் கூடிய தீவிர சிகிச்சை படுக்கைகளுக்கு ரூ.35000 என நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சிகிச்சைக் கட்டணங்களை மாற்றி அமைத்து தமிழக அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  அதன்படி தீவிரமற்ற ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளுக்கு ஒரு நாள் கட்டணமாக ரூ.3000 மற்றும் தீவிரமற்ற ஆக்சிஜன் உள்ள படுக்கைகளுக்கு ரூ. 7000 எனவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.