சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய  கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்று 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 4,176 பேர் கொரோனாவில் இருந்து  குணமடைந்துள்ளனர். இதுவரை 8,91,839 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 29 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,999 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று மேலும் 2,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர  செங்கல்பட்டு 685 பேர், கோவை 534 பேர், திருவள்ளூர் 473 பேர், காஞ்சிபுரம் 203 பேர், தஞ்சையில் 166 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 95,387 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில்வ, தமிழகத்தில்  58,097 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

[youtube-feed feed=1]