டெல்லி:

லக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் தனது வீரியத்தை அதிகரித்து வருகிறது.

இந்த வைரஸ் தொற்றை தடுக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் முதல், நமது மத்திய மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.

கொரோனா தொற்று கைகள் மூலம் மூச்சுக்குழல் வழியாக உடலுக்குள் நுழைந்துவிடும் என்பதால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகக் கவசங்கள் அணிவதை விட கைகளை அடிக்கடி கழுவுவது, முகத்தில் கை படாமல் பார்த்துக் கொள்வது ஆகியவையே கொரோனா பரவலை தடுக்க உதவும் என உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையை ஏற்று இந்திய ராணுவத்தினரும் தங்களது கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவும் காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.