சென்னை:
கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தீவரமாக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக வார இறுதி நாட்களில் வழிப்பாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை, கடைகளின் நேரத்தை குறைப்பது, இரவு நேர ஊரடங்கு, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, , ஞாயிற்று கிழமை தவிர மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.