சென்னை: மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா குறைவு என்கிற எண்ணத்தில் மக்கள் வெளியே நடமாடக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கைமீறி சென்று விட்டதாக கூறிய கூறிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர், அதனால்,  இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக கூறினார்.  தற்போதும் தொற்று பாதிப்பு  நாள் ஒன்றுக்கு 15ஆயிரத்தை  தாண்டி உள்ளது.  ஆனால், தமிழகஅரசு வீடு வீடாக காய்ச்சல் சோதனை நடத்தப்படும் என தெரிவித்த நிலையில், அதை செயல்படுத்தாமல் இருந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி கிடைக்காத நிலையில், அரசின் இணையதளம் படுக்கை வசதி இருப்பதாக கூறி வருகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன்,  தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை  அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் கொரோனா பரவலின் வேகம் கடந்த இரண்டு நாள்களாக சற்றுக் குறைந்திருக்கிறது என்றும், வரும் நாட்களில் பொது நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்து கொள்வதை குறைத்துக் கொண்டால் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கொரோனா தொற்று மேலும் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்த உண்மை நிலவரத்தை தெரிவித்தால், வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்து விடும் என்பதால், மக்களையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றும் வகையில், தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவது போல ஒரு பொய் தோற்றத்தை உருவாக்கி வருவதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர்.