Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

கடந்த 24மணி நேரத்தில் 90,633 பேர்: கொரோனா பாதிப்பில் அபாய கட்டத்தை நோக்கி செல்லும் இந்தியா….

Sep 6, 2020

டெல்லி:  இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு அபாய கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களாக அமல் படுத்தப்பட்டுவந்த பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு உச்சம் பெற்று வருகின்றன.

கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு 60ஆயிரம் அளவிலேயே பாதிப்புகள் தெரிய வந்த நிலையில், கடந்த மாத இறுதியில் 70 ஆயிரமாக உயர்ந்து. இந்த மாத தொடக்கத்தில் இருந்து மேலும் பாதிப்பு அதிகரித்து வந்தது.  சில தினங்களாக தினசரி 80 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் உச்சம் பெற்றுள்ளது.

நாடு முழுவதும், இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 90ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.  மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் சூழலில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது சுகாதார நிபுணர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக, உலக அளவிலான கொரோனா பாதிப்பு பட்டியலில் இருந்து பிரேசினை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது.  தொற்று அதிகரித்து வரும் பாதிப்பு அபாயகட்டத்தை நோக்கி செல்வதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில், 90,633 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு 41,13,812 ஆக உயர்ந்துள்ளது.

கடநத் 24 மணி நேரத்தில் 1,065 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70,626  ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.72 சதவீதமாக உள்ளது.
 கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  31,80,865 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 73642 பேர் குணமடைந்துள்ளனர்.  குணமடைந்தோர் விகிதம் 77.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,62,320 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
செப்டம்பர் 5ந்தேதி வரை   4,88,31,145 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 10,92,654 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறையோ, எப்போதும்போல,  பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப் படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

Post navigation

பிறந்த குழந்தைக்கு கொரோனா: பெற்றோர் தப்பி ஓட்டம்
06/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer