சென்னை:
க்களிடையே உரையாற்றி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள்தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் அதிக அளவிலான கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
இதையெடுத்து, மாலை 5 மணி அளவில் தமிழக முதல்வர் பழனிச்சாமி மக்களிடையே உரையாற்றி வருகிறார். அப்போது, சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
சென்னையில்  மக்கள்தொகை நெருக்கம் காரணமாக பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும், சென்னை யில் குறுகலான தெருக்களில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர். தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், சென்னையில் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யப் படுகிறது. சென்னை முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.  சென்னையில் 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை அதிக அளவில் நடத்தப்பட்ட வருவதாகவும்,  தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு சதவிகிதம் குறைவு  என்று கூறியவர், அதற்கு காரணமாக மருத்துவர்கள், செவிலியர்களை உளமாற பாராட்டுகிறேன் என்றார்.
சென்னையின் 15 மண்டலங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப் பட்டும்,   கொரோனா தடுப்பு பணிக்காக 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
சென்னையில் கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு ரூ. 1000 நிதியுதவி, மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளோம், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றி வரும் வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களும், காவல், கூட்டுறவு போன்ற துறையினர், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்களும், அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.