சென்னை:
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  தற்போது இரண்டு காவல்துறை உயர் அதிகாரிகள் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் . இருவரில் ஒருவர் ஐ.பி.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடதக்கது
இது சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நிலையில்,  நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. நேற்று ஒரே நாளில்,  798 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 8,002 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த  மருத்துவர்கள், செவிலியர் கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை என பலருக்கும் கொரோனா தொற்று பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை டிஜஜி அலுவலகத்தில் பணியாற்றிய வந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தீயணைப்பு துறையினர் பலருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சென்னையில் 2 துணை ஆணையர்கள், ஒரு உதவி ஆணையர் உள்பட 100 காவல்துறையினருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]