சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் அதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (27/05/2021) ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், சட்டத்தை மீறி வெளியே செல்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகிறது. இதை தடுக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  இதற்கிடையில் சில மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்தாலும் வேறு சில மாவட்டங்களில் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (27/05/2021) காலை 11.00 மணிக்கு  ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

[youtube-feed feed=1]