
சென்னை: தமிழகம் முழுவதிலுமுள்ள 825 அரசுக் கட்டடங்களில் கொரோனா தனிமை வார்டுகளை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 38 மாவட்டங்களில், அரசின் 825 புதிய கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தக் கட்டடங்களில் மொத்தம் 50852 படுக்கைகளை அமைக்கும் வசதிகள் உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில், 57 வயதுடைய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தொற்று உறுதிசெய்யப்பட்ட 2 நபர்கள் உள்ளிட்ட இந்த 3 நபர்களும், டெல்லி நிஜாமுதீன் மத மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel