தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட செய்தியாளர்களுக்கு  கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் தலைவர் அய்யலுசாமி மனு அளித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்த செய்திகளை உடனுக்குடன் செய்தியாளர்கள் வழங்கி வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பில்லாமல் பணியாற்றி வருவதால், அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி வடக்கு பகுதி மாவட்ட காங்கிரஸ் துணைதலை வரும், வழக்கறிஞருமான அய்யலுசாமி மனு அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில்,  கோவில்பட்டி கயத்தாறு தூத்துக்குடி என அனைத்து செய்தியாளர்களும் இரவு பகலாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களிளை செய்தி சேகரிக்க செல்லுகிறார்கள்। அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு தற்காப்பு ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை ஆகும்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தி பாதுகாப்பு முழு கவச உடை கைஉரை முககவசம் கிருமி நாசினி சானிடைசர் உள்ளிட்டவைகள் தினமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே இது சம்பந்தமாக 23.3.20 அன்று கோவில்பட்டி சார் ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளேன்

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.