சென்னை:

கொரோனா பாதிப்பு எதிரொலியாக சென்னையில் உள்ள சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் மூடப்பட்டது.

சத்தியம் டிவியின் உதவி ஆசிரியருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சத்தியம் டிவி அலுவலகத்தை சுகாதாரத்துறை ஊழியர்கள் மூடி சீல்வைத்தனர். ஊழியர்கள் அருகில் உளள் சத்தியம் மீடியா காலேஜில் தனிமை படுத்தப்பட்டனர்.…. தொடர்ந்து, நிறுவனத்தை சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சென்னை பாலிமர் டிவி பிரேக்கிங் செய்தி ஆசிரியருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல். அதைத் தொடர்ந்து அவருடன் தங்கியிருந்த 4 பேருக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 4 பேருமே பாலிமர் டிவியில் பணியாற்றுகின்றனர். அதில் 2 பேர் நிருபர்கள். மேலும் பலருக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஊடகத்துறையினருக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]