சென்னை:
மிழகத்தில் கொனாரா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த திட்டம் இன்றுடன் முடிவடைவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல், தமிழகத்தில் உள்ள  அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர் களுக்கும் 1,000  அவரவர் பகுதிகளுக்கே சென்று   நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. விடுபட்டவர்கள் நியாயவிலைக் கடைகளில் சென்று வாங்கி வந்தனர்.
இந்த நிலையில்  அனைத்து நியாய விலைக்கடைகளிலும் ரூ.1000 வழங்கும் திட்டம் இன்றுடன் நிறைவு பெறுவதாகவும், இதுவரை  தமிழகத்தில் உள்ள 2.01 கோடி அட்டைத்தாரர்களில் 1.98 கோடி அட்டைத்தாரர்கள் (99% பேர்) தங்களுக்கான ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.