சென்னை:

சிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி, தமிழகத்திலும் ரேபிட் டெஸ்ட் சோதனை நிறுத்தப்பட்டதாக  தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் கிட் சோதனைகளில் தவறுகள் ஏற்படுவதாக கூறி,  ராஜஸ்தான் மாநிலத்தில்  ரேபிட் கிட் பரிசோதனை நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ஐசிஎம்ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நாடு முழுவதும் ரேபிட் கிட் சோதனை களை நிறுத்த அதிரடியாக அறிவித்தது. மேலும் புதிய நெறிமுறை அறிவிக்கும் வரை அதை உபயோகப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்திலும் ரேபிட் கிட் மூலம் சோதனை செய்யப்படுவது நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதுவரை 2ஆயிரம் பேருக்கு ரேபிட் கிட் மூலம் சோதனை செய்யப்பட்டுள்ள இருப்பதாகவும், மத்தியஅரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து சோதனையை நிறுத்தி இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறைதெரிவித்து உளளது.