யநாடு

கொரோனாவை கண்டறியும் 50 தெர்மல் ஸ்கேனர்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்துக்கு வழங்கி உள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது.  இதில் அதிக அளவில் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு கடும் பதட்டம் உள்ளது.

கோவிட்19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளதா என்பதை தெர்மல் ஸ்கேனர் மூலம் முதலில் சோதிக்கப்படுவது வழக்கமாகும்.   அதில் பாதிப்பு இருப்பது தெரிய வந்தால் அதன் பிறகு இரத்த மாதிரிகளைச் சோதனை செய்வது மூலம் உறுதிப்படுத்துவது வழக்கம்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி கேரள மாநிலத்துக்கு 50 தெர்மல் ஸ்கேனர்கள் வழங்கி உள்ளார்,  இதை வயநாடு மாவட்ட ஆட்சியர் அடீலா அப்துல்லாவிடம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாலகிருஷ்ணன் அளித்துள்ளார்.

ராகுல் காந்தி கொடுத்த 50 தெர்மல் ஸ்கேனர்களில் 30 வயநாடு பகுதிக்கும், 10 கோழிக்கோடு மாவட்டம் மற்றும் 10 மலப்புரம் மாவட்டம் என ஒதுக்கீடு செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளதாக பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.