சென்னை:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு, நாள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில், மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில், நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

வரும் 27ஆம் தேதி பிரதமர் மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.