மதுரை: மதுரையில்இன்று கொரோனா பரவல் குறித்து களஆய்வு செய்து வரும் தமிழக முதல்வர், மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா தடுப்பு மையம்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
2நாள் பயணமாக 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று சேலம், கோவை, திருப்பூர் பகுதிகயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனதுடன், கொரோனா குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இரவு மதுரை சென்றவர். இன்று காலை மதுரையில் கொரோளா கள நிலவரம் குறித்து ஆய்வு செய்தார்.
இன்று காலை 10 மணிக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு ஆகியவற்றையும் கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள மதுரை அருகே உள்ள தோப்பூருக்கு காரில் சென்றவர்ல, அங்கு அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அவர் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து மு.க.ஸ்டாலின் பிற்பகல் கார் மூலம் திருச்சி மாவட்டத்திற்கு செல்கிறார்.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், படுகாயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் என 17 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்புக்கான ஆணைகளை தமிழக முதல்வர் அவர்கள் இன்று வழங்கினார்.