சென்னை: நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் பிறழ்வு வைரசான ஒமிக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உளளது. சமீபத்தில் பாலிவுட் நடிகர், நடிகைகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டு உள்ளதாகவும், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் அறி விக்கப்பட்டு உள்ளது.