சென்னை:
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் ஆளுநர் உள்பட ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கொரோனா சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சமடைந்துள்ளது. கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,438 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போத ஆளுநர் உதவியாளருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
இதையடுத்து, ஆளுநர் பன்வாரில் உள்பட அவரது குடும்பத்தினர், ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.