சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் பணிபுரிந்து வரும்  84 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. இதையடுத்து சென்னையில், அனைத்து தரப்பினருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக சுகாதாரத் துறை பணியாளர்கள், காவல்துறையினர் என பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் 147 பேர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டது. இதன் முடிவு வெளியாகி உள்ளது.
இதில் ராஜ்பவனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் 84  காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள்   அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து பூந்தமல்லி தலைமை அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து சிஆர்பிஎப் காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்துவதற்கு உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.