சென்னை:
மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று 40ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தொடர்ந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையேஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 180 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 131 பேரும், திருவண்ணாமலை – 125 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுஉள்ளனர். இது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,254பேர் பாதிக்கப்பட்டனர். சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது. அதில் 17,285 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 21,796 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 559 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சென்னையைத் தொடர்ந்து, அண்டை மாவட்டமான செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது.
மாவட்டம் வாரியாக விவரம்:
அரியலூர் – 7
செங்கல்பட்டு – 180
சென்னை – 1254
கோவை – 11
கடலூர் – 15
தர்மபுரி – 2
திண்டுக்கல் – 6
ஈரோடு -0
கள்ளக்குறிச்சி – 2
காஞ்சீபுரம் – 87
கன்னியாகுமரி – 14
கரூர் – 1
கிருஷ்ணகிரி – 6
மதுரை – 90
நாகப்பட்டினம் – 4
நமக்கல் – 0
நீலகிரி – 0
பெரம்பலூர் – 3
புதுக்கோட்டை – 10
ராமநாதபுரம் – 48
ராணிப்பேட்டை – 67
சேலம் – 40
சிவகங்கை – 32
தென்காசி – 7
தஞ்சாவூர் – 9
தேனி – 8
திருப்பதூர் -11
திருவள்ளூர் – 131
திருவண்ணாமலை – 125
திருவாரூர் – 2
தூத்துக்குடி – 46
திருநெல்வேலி – 22
திருப்பூர் – 0
திருச்சி – 23
வேலூர் – 36
விழுப்புரம் – 23
விருதுநகர் – 10