ஆந்திராவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்தது…!

Must read

ஐதராபாத்: ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துவிட்டது.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆந்திராவிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந் நிலையில், ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
24 மணிநேரத்தில் புதிதாக 3,765 பேருக்கு  கொரோனா தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  8,00,684 ஆக உயர்ந்துள்ளது.
31,721 பேர் சிகிச்சை பெற்று வர, 7,58,138 பேர் வீடு திரும்பி விட்டனர் . 24 மணி நேரத்தில் புதியதாக 20 பேர் பலியாக ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை  6,544 ஆக உள்ளது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article