சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையார் பிரகாஷ் ஒரு தகவலையும், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதா கிருஷ்ணன் மாறுபட்ட தகவல்களையும் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே விஷயத்தில், ஒரே நேரத்தில் இரு உயர்அதிகாரிகளும் மாறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ள மக்களிடையே குழப்பதை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சென்னையில் 1,012 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 17,597 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, இன்று காலை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து, ஆணையர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகளுடன் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து ஆணையாளர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இனி அரசின் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துதலை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், ஆணையாளர் பிரகாஷ் கூறிய விளக்கத்துக்கு நேர் எதிர்மறையான விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், சென்னையில் விதிகளை மீறுவோருக்கு மட்டுமே தனிமைப்படுத்துதல் ரத்து செய்யப்படும் என்றும், கொரோனா உள்ளவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும் என்று ஆணையாளர் பிரகாஷ் கருத்துக்குக்கு எதிரான கருத்தை தெரிவித்தார்.
கொரோனா நோயாளிகளின் வீட்டு தனிமை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறி வெளியே சுற்றி வருகின்றனர். அரசின் அறிவிப்பை பின்பற்றாமல், அத்துமீறல் செய்பவர்களை பொலீஸ் உதவியுடன் சென்னை மாநகராட்சி கண்காணிக்கும், மீறுவோர் மீது வழக்கும் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தஉள்ளார். மேலும், வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறும் நபர்கள் மட்டுமே நிறுவன தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு கொண்டு செல்லப்படுவார்கள், கொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்றும் எச்சரித்தார்.
தொடர்ந்து பேசியவர், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் ஒரு மாதத்துக்கு முக கவசம் அணிய வேண்டும். அப்படி முக கவசம் அணிந்தால் கொரோனா பரவல் குறைய வாய்ப்பு உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், தெருத்தெருவாக நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை நடத்தப்படுகிறது.
கொரோனா விஷயத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரகாசும், சிறப்பு ஆணையாளர் ராதாகிருஷ்ணனும் முரணான கருத்துக்களை தெரிவிதிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.