வீட்டில் தனிமைப்படுத்துவது ரத்தா? பிரகாஷ், ராதாகிருஷ்ணன் முரண்பட்ட தகவல்…

Must read

சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையார்  பிரகாஷ் ஒரு தகவலையும், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதா கிருஷ்ணன் மாறுபட்ட தகவல்களையும் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்
ஒரே விஷயத்தில், ஒரே நேரத்தில் இரு உயர்அதிகாரிகளும் மாறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ள மக்களிடையே குழப்பதை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சென்னையில் 1,012 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 17,597 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, இன்று காலை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து,  ஆணையர் பிரகாஷ்  மற்றும்  அதிகாரிகளுடன் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து ஆணையாளர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இனி அரசின் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

More articles

1 COMMENT

Comments are closed.

Latest article