சென்னை:
சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினரும், சுகாதாரத் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் படு பயங்கரமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் விஷயத்தில் மாநில அரசு தோல்வியை தழுவி உள்ளது.
இந்த நிலையில் கொரோனா தீவிரமாகி வரும் சென்னையில் இதுவரை இதுவரை 12, 762 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
அவரை கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத்துறை, காவல்துறை ஈடுபட்டு வருகிறது. தப்பியோடிய நபர் மூலம் பலருக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளதால், அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel