மலேசியாவில் நாளை முதல் ஜூன் 7ந்தேதி வரை மீண்டும் பொதுமுடக்கம் அறிவிப்பு

Must read

லேசியாவில் நாளை (மே 11) முதல் ஜூன் 7 வரை நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது 3வது முறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகரித்து வரும் கோவிட் -19 வழக்குகள் காரணமாக நாடு முழுவதும் மே 12 முதல் ஜூன் 7 வரை இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும் என்று பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக  மலேசியாவில் நாடு தழுவிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த தேசிய பாதுகாப்பு மன்றம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அதனால், நாடு  தழுவிய ஊரடங்கை அமல்படுத்தி இருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மலேசியால் கடந்த ஆண்டு முதன்முறையாக பொதுமுடக்கம்  அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த ஜனவரியில் சில நாட்களும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. தற்போது 3வது முறையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த காலக்கட்டத்தில்  அத்தியாவசிய தேவைகளுக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இயங்கும்,  எனினும், சமூக நடவடிக்கைகள், உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல், மாவட்டங்கள் மாற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பயணம் அனைத்தும் தடை செய்யப்படும் என்று பிரதமர் முகைதீன் அறிவித்து உள்ளார்.

 

 

More articles

Latest article