சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ள நிலையில், தேமுதிக வேட்பாளர்கள் 2 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தற்போத 3வது நபராக  தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. ஆனால், விருத்தாசலம் தொகுதி வேட்பாளர் பிரேமலதாவுக்கு கொரோனா நெகடிவ் என தகவல வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், தேமுதிக  தலைவர் துணைப்செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து, தீவிரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அவரது சகோதரியான பிரேமலதாவுக்கும், உடன் பணியாற்றி வந்த  பார்த்தசாரதிக்கும்  கொரோனா சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவரின் பரிந்துரை பெயரில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

ஆனால், பிரேமலதாவுக்கு கொரோனா நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தேமுதிக வேட்பாளர்  தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், எல்.கே.சுதீஷ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 3வது நபராக பார்த்தசாரதியும் தொற்றால் பாதிககப்பட்டுள்ளது தேமுதிக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.