டேராடூன்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியமாக்கப் பட்டுள்ளது

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.  இது கொரோனாவின் இரண்டாம் அலை தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.   இந்த கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் இந்தியாவில் பல முக்கிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி ஆகி அதில் 1,713 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 95,212 குணம்  அடைந்து  தற்போது 1,696 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  சுற்றுலாப் பயணிகள் வருகை இம்மாநிலத்தில் அதிகம் காணப்படுவது வழக்கமாகும்.

இதையொட்டி உத்தரப்பிரதேச அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில்,

வரும் ஏப்ரல் 1 முதல் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தமிழகம், குஜராத், அரியானா, உத்தரப்பிரதேசம், டில்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியமாகும்.  இது 72 மணி நேரத்துக்குள் பெற்றதாக இருக்க வேண்டும்

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.