வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,560 உயர்ந்து 41,79,839 ஆகி இதுவரை 2,83,850 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,560 பேர் அதிகரித்து மொத்தம் 41,79,839 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3626 அதிகரித்து மொத்தம் 2,83,850 பேர் உயிர் இழந்துள்ளனர். 14,90,511 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். 47,040 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,329 பேர் அதிகரித்து மொத்தம் 13,67,638 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 750 அதிகரித்து மொத்தம் 80,787 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,56,336 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 16,514 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1880 பேர் அதிகரித்து மொத்தம் 2,64,663 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 143 அதிகரித்து மொத்தம் 26,621 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,76,439 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1650 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3923 பேர் அதிகரித்து மொத்தம் 2,19,183 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 268 அதிகரித்து மொத்தம் 31,855 பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது 1559 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இத்தாலியில் நேற்று 802 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2.19,070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 155 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 30,560 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4353 பேர் அதிகரித்து மொத்தம் 67,161 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 111 அதிகரித்து மொத்தம் 2212 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 20,969 பேர் குணம் அடைந்துள்ளனர்