சென்னை:
கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை மாறி வருகிறது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைய கோயம்பேடு மார்க்கெட் காரணமாக இருந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக கொரோனா தாக்கத்துக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இன்று உயிரிழந்தனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 64 வயது மூதாட்டியும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 56 வயது பெண்ணும் இன்று உயிரிழந்துள்ளதாகசுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 42 ஆக உயர்ந்துள்ளது.