மும்பை

ஒரு திரைப்படத்துக்கு கொரோனாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது/

ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் அதிகம் அடிபடும் விஷயங்களை சினிமா ‘டைட்டிலாக’ வைப்பது எல்லா மொழி சினிமா காரர்களையும் தொற்றிக்கொள்ளும் –ஜுரம்.

80களில் டெல்லியை அலற வைத்த பில்லா- ரங்கா ஆகியோர் பெயர்களில் இரண்டு தமிழ்ப் படங்கள் வெளிவந்தன.

இரண்டிலும் ரஜினி நடித்திருந்தார்.

ஆட்டோ சங்கர், சந்தன வீரப்பன் பெயர்களில் படங்கள் வரவில்லையே தவிர, அவர்களை கேரக்டர்களாக கொண்டு தமிழ்ப் படங்கள் உருவாக்கப்பட்டன.

இப்போது, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் கொரோனா பெயரில் ஒரு இந்தி படம் தயாராக உள்ளது.

கொரோனா பியார் ஹை’’ என்ற பெயரில் ,இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தில்  இந்தப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபலமான ஈராஸ் நிறுவனம் இந்த பெயரைப் பதிவு செய்துள்ளது.

காதலைச் சொன்ன இந்தப்படத்தின் பெயரைக் காப்பி அடித்து, இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு ஹிரித்திக் ரோஷன் –அமீஷா படேல் ஜோடியாக நடித்து பெரும் வெற்றி பெற்ற படம்- காஹோ நா.. பியார் ஹை’’.

காதலும், திரில்லரும் கலந்த இந்த படத்தை ஹிருத்திக்கின் அப்பா ராகேஷ் ரோஷன் தயாரித்து, டைரக்ட் செய்திருந்தார்.

‘கொரோனா பியார் ஹை’ படமும் காதலைச் சொல்லும் படமாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

‘’ கொரோனா பியார் ஹை’ படத்துக்கான ஸ்கிரிட் எழுதும் வேலை நடந்து வருகிறது. விரைவில் முழு வீச்சில் ஷுட்டிங் ஆரம்பாகும்’’ என்கிறார் படத்தின் தயாரிப்பாளர், கிருஷ்கிகா லுல்லா.