
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.441 கோடியில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம் மற்றும் ரெயில்வே மேம்பாலத்தை தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்து பேசினார். அப்போது,
சேலம் மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் விதமாக ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டு என்று கூறியவர், ஈரடுக்கு மேம்பாலத்துக்கு ஜெயலலிதா பெயரும், ரெயில்வே மேம்பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரும் சூட்டினார்.
தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு உள்பட அனைத்து புள்ளி விவரங்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது. தமிழகஅரசு எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது. உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் கொரோனாவால் ம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது என்று தெரிவித்தவர், கொரோனா பாதிப்புடன் பல்வேறு நோய் உள்ளவர்களால் தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது என்று விளக்கம் அளித்த எடப்பாடி, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு சதவிகிதம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் தான் அதிக அளவில் வென்டிலேட்டர்கள் உள்ளன என்று கூறினார்.
சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்தவர், சேலம் உள்பட பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் கொரோனா வேகமாக பரவிவிடும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூக பரவலாக மாறவில்லை என்றும், மக்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றினால் தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Patrikai.com official YouTube Channel